பள்ளி, கல்லூரிகளில் காவல்துறையினர் குவிப்பு
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி ஜுலை 29ம் தேதி மாணவ, மாணவிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது. மாணவ, மாணவிகள், பள்ளியில் இருந்து வெளியில் செல்வதைத் தடுக்கும் பொறுப்பு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்கள், பள்ளியில் இருந்து வெளியில் சென்றால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்னதாக தமிழக அரசு பள்ளி நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்தது. இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று காலையில் சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பள்ளி மாணவர்கள் வெளியில் செல்லவோ, ஒன்றாக திரளவோ தடை செய்யப்பட்டுள்ளனர். சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.