உள்ளூர் செய்திகள்

இருக்கவே இருக்கு இன்பர்மேஷன் டெக்னாலஜி

ராஜஸ்தானில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் கல்வி நிறுவனம், இளங்கலை படிப்பில் பி.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.எஸ்., இன்பர்மேஷன் சிஸ்டம் மற்றும் முதுகலை படிப்பில் எம்.எஸ்., மனுபாக்சரிங், எம்.எஸ்., சாப்ட்வேர் சிஸ்டம் போன்ற படிப்புகளுக்கு சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி: இளங்கலைப் படிப்பிற்கு, டெக்னிக்கல் பிரிவில் டிப்ளமா அல்லது இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி அத்துடன் ஐ.டி.,அல்லது இன்ஜினியரிங் தொழிற்சாலைகளில் இரண்டு ஆண்டு தொழில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுகலை படிப்பிற்கு பி.ஐ.டி.எஸ்.,பி.இ., அல்லது எம்.எஸ்சி., போன்ற படிப்புகளில் தேர்ச்சி அத்துடன் ஐ.டி., அல்லது இன்ஜினியரிங் தொழிற்சாலைகளில் ஒரு ஆண்டு தொழில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் கல்லூரி இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை டவுண்லோடு செய்து அத்துடன் ஆயிரத்து 500 ரூபாய்க்கான டி.டி மற்றும் விண்ணப்பபடிவத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்து அக்.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு www.bitspilani.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்