உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கல்

ஈரோடு: தமிழக அரசு சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் 2011 டிசம்பர் 31ம் தேதியுடன் முடியும் காலாண்டின்படி தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளியில் படித்து தேர்ச்சி பெறாதவர்கள், அதற்கு மேல் கல்வித் தகுதியுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்க கூடாது. விண்ணப்பதாரர் குடும்ப வருவாய் 50 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரியில் நேரடியாக படித்துக் கொண்டிருக்க கூடாது. அஞ்சல் வழியில் படிக்கலாம். முற்றிலும் வேலை வாய்ப்பு இல்லாதவராகவும், சுய தொழிலில் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கல்வித்தகுதியை தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும். அல்லது, அவரது பெற்றோர், பாதுகாவலர் தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவராக இருக்க வேண்டும். அவர் வேறு எந்த நிதியுதவியும் பெறக்கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இதுபோன்ற தொழில் நுட்பக்கல்வி பயின்றவர்களுக்கு இத்தொகை வழங்கப்பட மாட்டாது. உதவித்தொகை பெற தகுதியானவர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கி கணக்கு துவங்கி, வங்கி புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பிற சான்றுகளுடன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நவம்பர் 31க்குள் வழங்க வேண்டும். உதவித்தொகை பெற்று மூன்றாண்டுகள் நிறைவு பெறாதவர்களும், 2011 - 12ம் ஆண்டுக்கான சுய உறுதி அளிக்காதவர்களும், நவம்பர் 30ம் தேதிக்குள் சுய உறுதி ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்