ரயில்வே பணியிடத்திற்கு யு.பி.எஸ்.சி. தேர்வு
ரயில்வே பணியிட பயிற்சித் திட்டத்தில் மெக்கானிக்கல் துறையில் ஆட்களை தேர்வு செய்ய யு.பி.எஸ்.சி. 2012, ஜனவரி 29ம் தேதி தேர்வு நடத்த உள்ளது. இந்தியாவில் பல்வேறு தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வெழுத விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் இந்த தேர்வு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதுவோரின் தகுதி, விதிமுறைகள், பாடத்திட்டம், தேர்வு முறை, தேர்வு மையங்கள், வழிகாட்டுதல் அனைத்தையும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பே படித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அக்டோபர் 22ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அல்லது யுபிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.