அரசு பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கீடு
தமிழகத்தில், ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு, மத்திய அரசால் மானியம் வழங்கப்படுகிறது. 2011-12ம் ஆண்டிற்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம், 5,647 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆய்வக உபகரணங்கள் மாற்றி அமைத்தல், வேதிப்பொருட்கள் , கணித உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம், புத்தகம், தினசரி, மாத, வார இதழ்கள், மத்திய-மாநில அரசுகள் பரிந்துரைத்த ஆசிரியர்களுக்கு குறிப்பு புத்தகங்கள் வாங்க ரூ.10 ஆயிரம், விளையாட்டு, இசை, ஓவியம், கற்பித்தலுக்கான உபகரணங்கள், விளையாட்டு சீருடைகள், பள்ளி கூட்டங்களுக்கான செலவுகள், போக்குவரத்து, எழுதுபொருட்கள், தண்ணீர், மின் கட்டணம், தொலைபேசி, இணையதள கட்டணங்களுக்கு ரூ.15 ஆயிரம் செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.