உள்ளூர் செய்திகள்

பாலியல் தொழிலாளர்களுக்கான இக்னோவின் கல்வித்திட்டம்

ஆமதாபாத்: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ), பாலியல் தொழிலாளர்‌கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வித் தி்ட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, இக்னோ மண்டல இயக்குனர் சுஜிஸ் கே கோஷ் கூறியதாவது, சமுதாயத்தில், இத்தரப்பு மக்கள் கல்வி சேவை பெறுவதில் பெருந்தடை உள்ளது. இதன்காரணமாக, இவர்கள் சமுதாயத்தில் மேம்பட்ட இல‌க்கை அடைய முடியாமல் உள்ளனர். இவர்களை மேம்படுத்தும் பொருட்டு, இந்த கல்விமுறையை, வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்