உள்ளூர் செய்திகள்

கல்விச் சீர்திருத்தங்களுக்கு யு.ஜி.சி., நிதியுதவி

கல்விச் சீர்திருத்தங்களை முழு வீச்சில் நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில் சில கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி தரப்படும் என யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. இதன்மூலமாக பிரசித்தி பெறாத கல்வி நிறுவனங்களில் எம்.பில்., அல்லது ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கும் 6 மாத காலத்திற்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அல்லது மும்பை பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. உதாரணமாக பீகாரில் பகல்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் படிப்பை மேற்கொள்ள முடிவதோடு பகல்பூரில் படித்ததற்கான கிரெடிட்டுகளையும் பெற முடியும். இந்த சீர்திருத்தங்கள் வரும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஏற்கனவே 72 கல்வி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்