எம்.எட்., மாணவிக்கு தங்கப் பதக்கம்
செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வியியல் கல்லூரி எம்.எட்., மாணவி மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வியியல் கல்லூரியில் இந்த ஆண்டு எம்.எட்., தேர்வெழுதிய தெய்வானை, மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இவருக்கு வரும் 5ம் தேதி சென்னையில் நடக்கும் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பழனியப்பன், துணை வேந்தர் விஸ்வநாதன் முன்னிலையில் கவர்னர் ரோசைய்யா தங்கப்பதக்கம் வழங்க உள்ளார்.