மாவட்ட அளவிலான கபடி போட்டி
அன்னுார்: பிள்ளையப்பம் பாளையத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடக்கிறது. பிள்ளையப்பம்பாளையம், நடுநிலைப் பள்ளி மைதானத்தில், கோவை மாவட்ட அளவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி நடக்கிறது. இன்று மாலை 6.00 மணிக்கு துவங்கி, ஞாயிறு மாலை 6.00 மணி வரை போட்டி நடக்கிறது. இரவில் மின்னொளியில் போட்டி நடக்கிறது. இதில் முதல் நான்கு இடங்களை பெறும் ஆண்கள் அணிகளுக்கு, முறையே 10,010, 7,007, 5,005, 3,003 ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. முதல் நான்கு இடங்களை பெறும் பெண்கள் அணிகளுக்கு, முறையே, 5,005, 3,003, 2,002, 1,001 ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழா, நாளை மாலைநடக்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் நேரடியாகவும் பெயர் பதிவு செய்து பங்கேற்கலாம் என, போட்டி அமைப்பாளர்களான வெண்ணிலா கபடி குழு மற்றும் இளைஞர் பொதுநல அமைப்பினர் தெரிவித்தனர்.