உள்ளூர் செய்திகள்

ஆதரவற்றோருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல்: தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்ட விதவைகள், அனாதைகள், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் ஆதரவற்றோருக்கு சிறப்பு முகாம் நடத்தி வேலை வாய்ப்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் பல இளைஞர்கள் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காமல் உள்ளனர். சில பெண்கள் கணவனால் கைவிடப்பட்டும், விதவைகளாகவும், தாய், தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாகவும் உள்ளனர். இவர்களுடன் அனாதை இல்லங்களில் வசிப்பவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வருவாய்த்துறையினர் மூலம் அவரவரின் படிப்பிற்கும், திறமைக்கும் தகுந்த மாதிரி வேலைவாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் ஆதரவு இல்லாததால் பல இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மூளைச் சலவை செய்யப்பட்டு நக்சலைட்களாக உருவாகின்றனர். இதை தடுப்பதற்காக முகாம்களை நடத்தி வேலைவாய்ப்பளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் பட்டியலை மருத்துவத்துறையினரும், சமூக நலத்துறையினரும் தயாரித்து வருகின்றனர். மருத்துவ இணை இயக்குனர் ரவிகலா கூறியதாவது: வீட்டில் வேலை இல்லாமல் உள்ள பெண்கள், தாய், தந்தையை இழந்து தவிப்போருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும். திண்டுக்கல்லில் 11 குழந்தைகளை பெற்றிருந்த தாயின் மூத்த மகளுக்கு வேலைவாய்ப்பிற்கான ஏற்பாட்டினை செய்துள்ளேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்