உள்ளூர் செய்திகள்

வனக்கல்லூரி மாணவர்கள் சடல போராட்டம்

மேட்டுப்பாளையம்: கோரிக்கைகளை வலியுறுத்தி, வனக்கல்லூரி மாணவர்கள், சடல போராட்டம் நடத்தினர். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவியர், வனச்சரகர் பணியில், 100 சதவீதம் ஒதுக்கீடு செய்யக்கோரியும், வனவர் பணியில், வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க கோரியும், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பத்தாவது நாளான நேற்று, வனத்தைப் பற்றிய தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இல்லாததால், காடுகள் அழிந்து வருகின்றன. இந்நிலை நீடித்தால் வனதேவதையும், வனமும் இறந்து விடும் என்பதை உணர்த்தும் வகையில், மாணவ, மாணவியர் பிணம் போல கிடந்து போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்