கல்வி உதவிக்கு திறனாய்வு தேர்வு
நாமக்கல்: அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நாமக்கல்லில் நடந்தது. கிராமப்புற பள்ளி மாணவர்கள், அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக, தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வுகள் நாமக்கல் மாவட்டத்தில், நான்கு இடங்களில் நடந்தது. இதில் விண்ணப்பித்த, 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினர். நாமக்கல்லில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ப.வேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வுகள் நடந்தது. இதில், 1,145 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை மாதா, மாதம் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.