அறிவியல் மாநாடு; கட்டுரைகள் தேர்வு
திருப்பூர்: மாநில அளவிலான அறிவியல் மாநாட்டுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 12 பள்ளி மாணவர்களின் படைப்புகள் தேர்வாகியுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு, திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இயற்கையின் கால நிலை குறித்து, 81 ஆய்வு கட்டுரைகளை மாணவர்கள் சமர்ப்பித்தனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் சதாசிவம், உதவி அலுவலர் பூங்கொடி பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் முகமது பாதுஷா, தியகராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் மற்றும் அலு வலர்கள், மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளை பார்வையிட்டனர். சீனியர் தமிழ் பிரிவில், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சீனியர் ஆங்கிலம் பிரிவில் செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுப்பையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜூனியர் தமிழ் பிரிவில் குண்டடம் வேறு வேடம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பல்லடம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளபாளையம் புனித ஜோசப் பள்ளி, அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காங்கயம் கே.சி.எஸ்., பள்ளி, வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. ஜூனியர் ஆங்கிலம் பிரிவில், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தேர்வாகியுள்ளன.