உள்ளூர் செய்திகள்

கற்றல் அடைவு தேர்வு துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாநில அளவிலான கற்றல் அடைவு தேர்வு துவங்கியது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார் பில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 3, 5 மற்றும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில அளவிலான கற்றல் அடைவு தேர்வு நேற்று துவங்கியது. இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த தேர்வை கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில், சி.இ.ஓ., தமிழரசு துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியது: மாவட்டம் முழுவதும், 10 யூனியன்களில் உள்ள, 260 பள்ளிகளில், மாநில அளவிலான கற்றல் அடைவு தேர்வு நடக்கிறது. 6950 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்