மாணவர்களின் திறன்களை கண்டறிய அறிவுரை!
ஊட்டி: மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டியது, ஆசிரியர்களின் கடமை என, தெரிவிக்கப்பட்டது. ஊட்டி கிரசன்ட் பள்ளி ஆண்டு விழா, ஊட்டி அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் உமர் பரூக் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பல்கலை கழக மானிய குழு துணைத் தலைவர் தேவராஜ், கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசுகையில், மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்து கிடக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டியது, ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த அறிவு சார்ந்த அனைத்து விஷயங்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், என்றார். பள்ளி தலைமையாசிரியர் ஆபிரகாம், ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். புவியை காப்போம் என்ற தலைப்பில், மாணவர்கள் நிகழ்த்திய நாட்டிய நாடகம், பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது.