பிரெஞ்சு பிரவே தேர்வு துவங்கியது
புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு தேர்வு நேற்று நடந்தது. புதுச்சேரி கலவை கல்லுாரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிரெஞ்சு அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பான்சியோனா அரசு பிரெஞ்சு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, புனித லுாயி தெபொன்சாகா உயர்நிலைப்பள்ளிகளில், பிரெஞ்சு மொழி வழிக்கல்வி மாணவர்களுக்கு பிரெஞ்சு பிரவே பொதுத்தேர்வு நேற்று நடந்தது. இதில் புதுச்சேரியில் 60 பேரும், காரைக்காலில் 10 பேரும், மாகியில் 10 பேரும் தேர்வு எழுதினர். வரும் 28ம் தேதி தேர்வு முடிவு அறிவிக்கப்படுகிறது. பெண்கல்வி துணை இயக்குனர் சோமசுந்தரம், பல்கலைக் கழக பேராசிரியர் பன்னீர்செல்வம், பட்டதாரி ஆசிரியர் எட்வர்ட் சார்லஸ் மேற்பார்வையில் தேர்வு நடந்தது.