சங்கரா கல்லூரி மாணவர்கள் பரப்புரை
கோவை: சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி மாணவர்கள், தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நேற்று வீடு, வீடாக பரப்புரை செய்தனர். சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஈகோ கிளப் சார்பில், தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பரப்புரை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சாம்பிராணிக்குட்டை மற்றும் கீரணத்தம் ஆகிய பகுதிகளிலுள்ள, வீடுகளுக்கு நேரில் சென்ற மாணவர்கள், தண்ணீரின் தேவை, சிக்கனமாக பயன்படுத்தும் முறை குறித்து, மக்களுக்கு விளக்கம் அளித்தனர்; துண்டுபிரசுரங்களும் வினியோகித்தனர். நிகழ்ச்சியில், தமிழ்த்துறை தலைவர் தங்கவேலு, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கீரணத்தம் பஞ்சாயத்து தலைவர் சுகுமார் ஏற்பாடுகளை செய்தார்.