ஐதராபாத் பல்கலையில்துணைவேந்தர் அறை சூறை
ஐதராபாத்: தலித் மாணவர், ரோகித் வெமுலா தற்கொலை சம்பவம் நடந்து, இரண்டு மாதங்களுக்கு பின், ஐதராபாத் பல்கலை துணைவேந்தர், நேற்று, மீண்டும் பணிக்கு திரும்பினார். ஆனால், மாணவர்கள், அவரது அறையை அடித்து நொறுக்கி சூறையாடினர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள, ஐதராபாத் பல்கலையில், பிஎச்.டி., படித்து வந்த, தலித் மாணவர் ரோகித் வெமுலா, ௨௬, ஜனவரி, 17ல் தற்கொலை செய்தார். ஜாதி பாகுபாடு காரணமாக, அந்த மாணவர் தற்கொலை செய்ததாக, குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலைக் கழக துணைவேந்தர் அப்பாராவ், பணிக்கு வராமல் இருந்தார்; இரண்டு மாதங்களுக்குப் பின், நேற்று, அவர், மீண்டும் பணிக்கு திரும்பினார். ரோகித் வெமுலா தற்கொலையால் கொந்தளிப்பில் இருந்த மாணவர்கள், துணைவேந்தர் அறையின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி நாசப்படுத்தினர்; இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு துாண்டியதாக, துணைவேந்தர் அப்பாராவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.