உள்ளூர் செய்திகள்

பார்மசி கல்லூரி மாணவர்கள் மனு

திருப்பூர்: தேர்வு எழுதுவதற்கு, உடனடியாக ஏற்பாடு செய்து தர வேண்டும் என, காங்கயத்தை சேர்ந்த, பார்மசி கல்லூரி மாணவகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முறையிட்டனர். காங்கயம் அடுத்த ஆலாம்பாடியில், பார்மசி கல்லூரி கடந்தாண்டு துவங்கப்பட்டது. அக்கல்லூரியில், 28 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஓராண்டு நிறைவடைந்து, தேர்வு துவங்கிய நிலையில், இக்கல்லூரி மாணவர்களுக்கு, தேர்வு நுழைவுச்சீட்டு வரவில்லை. முறையான அங்கீகாரம் இல்லாததால் தேர்வுக்கு அனுமதிக்கவில்லையோ என அஞ்சிய மாணவர்கள், காங்கயம் போலீசில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து, தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு, அக்கல்லூரி மாணவ, மாணவியர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில், நேர்முக உதவியாளர் (பொது) கணேசசேகரிடம் மனு கொடுத்தனர். மாணவர்கள் கூறுகையில், நம்பிக்கையுடன் கல்லூரியில் சேர்ந்து படித்தோம். இதுவரை, தேர்வெழுத ஏற்பாடு செய்யவில்லை. தமிழகம் முழுவதும் தேர்வுகள் துவங்கிய நிலையில், எங்களால் எழுத முடியவில்லை. ஓராண்டு கல்வி பயின்றது வீணாவதை தடுக்க, தேர்வு எழுத, உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்&' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்