கே.பி.ஆர்., கல்லூரி பட்டமளிப்பு விழா
சூலுார்: அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கோவை, அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரியில் நடந்த மூன்றாவது பட்டமளிப்பு விழாவில், நிர்வாக இயக்குனர் சக்திவேல் தலைமை வகித்தார். முதல்வர் பொம்மண்ணராஜா வரவேற்றார். சென்னை டாடா கன்சல்டன்சி மனிதவளத்துறை மேலாளர் கென்னத் ஜெயசீலன், 385 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இன்று பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மறக்க கூடாது. நமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். எந்த ஒரு செயலிலிலும் முன் முயற்சி வேண்டும், என்றார்.ஐ.பி.எம்., நிறுவன ஆராய்ச்சி பொறியாளர் வீரதீனதயாளன், பல்கலை அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களை வழங்கினார். டீன் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.