உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு நிறைவு

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நேற்று நிறைவடைந்தது; சமூக அறிவியல் வினாத்தாள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கியது. திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 325 பள்ளிகளை சேர்ந்த, 29 ஆயிரத்து, 664 பேர் எழுதினர்; 81 மையங்களில், இத்தேர்வு நடைபெற்றது. மொழித்தாள் தேர்வுகள் எளிதாக அமைந்த நிலையில், மாணவர்கள் சற்று பயந்திருந்த, கணித தேர்வும், சுலபமாக இருந்ததால், நிம்மதி அடைந்தனர்.நேற்று, சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இறுதி தேர்வு என்பதால், தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களின் முகத்தில் உற்சாகத்தை பார்க்க முடிந்தது. இவர்களின் மகிழ்ச்சி தொடரும் வகையில், தேர்வு எளிதாக இருந்தது.மாணவர்கள் கூறுகையில், ஒரு மதிப்பெண், வரைபட வினாக்கள், கட்டுரை வினாக்கள் சுலபமாக இருந்தன. ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலில், கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு, இத்தேர்வு உதவும் என்றனர்.தேர்வு நிறைவடைந்ததால், மாண வர்கள் ஒருவருக்கு ஒருவர் பேனா மைகளை சீருடையில் தெளித்து, வண்ண பொடிகளை பூசிக்கொண் டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விடைத்தாள் திருத்த, திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் மையம் அமைக்கப்பட்டுள்ளது; 15ல் முதற்கட்ட பணி துவங்குகிறது; 18ல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்