அரசு கல்லூரி நாளை திறப்பு!
வால்பாறை: வால்பாறை அரசு கலைக்கல்லுாரி கோடைவிடுமுறைக்கு பின்னர் நாளை திறக்கப்படுகிறது. இது குறித்து வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறையை தொடர்ந்து, 2016-17ம் கல்வி ஆண்டுக்கான அனைத்து இளநிலை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் நாளை (16ம் தேதி) முதல் தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.