ஆசிரியர், மாணவருக்கு கல்வித்துறை விருது
மதுரை:பத்தாம் வகுப்பில் அறிவியல் கண்காட்சி, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் பரிசு வென்ற மதுரை நாகனாகுளம் அரசு உயர்நிலை பள்ளி மாணவி மகாலட்சுமி, சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளர் உயர்நிலை பள்ளி மாணவர் ராகுல் ஆகியோர் கல்வித்துறை சார்பில் &'புரட்சியாளர் விருது&'க்கு தேர்வு செய்யப்பட்டனர். இதுபோல் சிறந்த கவுன்சிலிங் மற்றும் இடைநிற்றல் இன்றி மாணவர்களை தொடர்ந்து பள்ளியில் நீட்டிக்க செய்த கீழநாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆசிரியை உமாராணி, &'அன்னை தெரசா விருது&'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களை தலைமை ஆசிரியர்கள் அதிராமசுப்பு, நவநீதகிருஷண்ன், முருகபாண்டியன் பாராட்டினர்.