பொது சுகாதாரத்துக்கு தனி பல்கலைக்கழகம்
இந்திய அரசின் நிதி உதவி, தனியார் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் வழங்கிய நிதி ஆகியவற்றின் மூலம், பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியா (பி.எச்.எப்.ஐ) துவங்கப்பட்டது. இது பொது சுகாதாரம் தொடர்பான பல்கலைகழகத்தை நிறுவி, அதில், முதுகலைப் பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை துவங்க திட்டமிட்டுள்ளது.பல்வேறு துறைகளை சார்ந்துள்ள பொது சுகாதார துறைக்கு, பொருளாதாரம், சமூக அறிவியல் உட்பட சில துறைகளை சேர்ந்தவர்கள் அவசியம் என,நிபுணர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து, பி.எச்.எப்.ஐ., தலைவர் கே.ஸ்ரீநாத் ரெட்டி,கூறுகையில், டாக்டர்களே, டாக்டர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பதிலாக, பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு, பல துறைகளை சேர்ந்தவர்கள் இந்த பல்கலைகழகத்தில் பாடம் நடத்துவர். இதற்காக, பி.எச்.எப்.ஐ., தனது முதன்மை வளாகத்தை டில்லியில் உள்ளஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்திலும், கூடுதல் வளாகங்களை ஐதராபாத் மற்றும் காந்தி நகர் பகுதியிலும் அமைக்க உள்ளது என்றார். இதுகுறித்து, பி.எச்.எப்.ஐ.,ன், பொது சுகாதார கல்வி துறை இயக்குனர் சஞ்சய் சோட்பே கூறுகையில், பொது சுகாதாரம் தொடர்பான இரண்டு ஆண்டு முதுகலைப் படிப்பிற்கு, மருத்துவம் சார்ந்த மாணவர்களே விண்ணப்பிப்பர் என எதிர்பார்த்தாலும், பொருளாதாரம், சமூக அறிவியல் அல்லது மேலாண்மை பிரிவு மாணவர்களையும் வரவேற்கிறோம். பொது சுகாதார படிப்பு தொடர்பான பல்கலை அடுத்த கல்வியாண்டு முதல் செயல்பட துவங்கும் என்றார்.