உள்ளூர் செய்திகள்

எழுத்தாளர்களுக்கு பரிசு விண்ணப்பம் வரவேற்பு

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலிந்த, சிறந்த எழுத்தாளர்கள், அரசு உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழக அரசால், ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் துவக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.இந்த சங்கத்தின் நிதியில் இருந்து, 2019 - - 2020ம் ஆண்டுகளுக்கான, ஆதிதிராவிடர், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த, 10 எழுத்தாளர்கள், ஆதிதிராவிடர் குறித்து எழுதும், ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என, மொத்தம், 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு, பரிசு வழங்கப்பட உள்ளது. அவர்கள் நுால் வெளியிட, 40 ஆயிரம் ரூபாய் வரை, நிதியுதவி அளிக்கப்படும்.இது தொடர்பான விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களை, தமிழக அரசின், tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும், விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.முறையான விண்ணப்பத்துடன், இரண்டு பிரதி படைப்புகள், விண்ணப்பதாரரின் மொபைல் எண் குறிப்பிட்டு, ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சேப்பாக்கம், சென்னை -- 05 என்ற முகவரிக்கு, இம்மாதம், 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்