உள்ளூர் செய்திகள்

தெற்காசிய அமைதிக்கான பெண்கள் மாநாடு

புதுடில்லி: இந்திய - பாகிஸ்தான் உட்பட தெற்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த சர்வதேச அளவிலான அனைத்து பெண்கள் மாநாடு &'ஆன்லைன்&' வாயிலாக நாளை துவங்குகிறது.தெற்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும் குறிப்பாக இந்தியா - பாக். இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து சர்வதேச அளவிலான அனைத்து பெண்கள் மாநாடு நாளை துவங்குகிறது.&'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டுக்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த &'டூ ஸ்கூல்&' என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.இதில் அமைதிக்கான நோபல் பரிசுக்காக மூன்று முறை பரிந்துரைக்கப்பட்ட அமைதி ஆர்வலர் ஸ்சில்லா எல்வொர்த்தி ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த எழுத்தாளர் அலைஸ் அல்பினியா டில்லியை சேர்ந்த லேடி ஸ்ரீராம் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் மீனாட்சி கோபிநாத் ஊடகவியலாளர் ஏக்தா கபூர் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்க உள்ளனர்.தெற்காசிய நாடுகளில் அமைதி மற்றும் நல்லிகணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக தங்கள் சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதற்காக இந்த மாநாடு நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்