அகில இந்திய கராத்தே போட்டி
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி கொடைக்கானலில் &'கோடை கப் - 2021&' என்ற தலைப்பில் நடந்தது. தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத் தலைவர் ஈஸ்வர் குமார் தலைமை வகித்தார். பொருளாளர் எபினேசர் சார்லஸ் முன்னிலை வகித்தார். மதுரை தனியார் நிறுவன உரிமையாளர் செல்வம் போட்டியை துவக்கி வைத்தார். நடுவர்களாக பார்த்திபன், அருள்குமார், சீனிவாசன், அன்பரசு, கவிதாகண்ணன், கார்த்திக்கேயன், ஜோதிராமலிங்கம் (கேரளா), சுரேஷ் (ஆந்திரா) ஆகியோர் பங்கேற்றனர்.ஓப்பன் கட்டா பிரிவில் சென்னையை சேர்ந்த முத்துத்தேவந்திரன் மாஸ்டர், முதல் பரிசாக கோடை கப் 2021 ஐவென்றார். தேனி லியோ கோஜூ ரியோ கராத்தே சங்கப் பள்ளியின் சார்பில் 7 வயது முதல் 17 வயது வரை பல்வேறு பிரிவுகளில் நிரஞ்சன், ராகுல்கண்ணன், ஹரிகரசுதன், ஆண்டனி லுாக், மதுமிதாஸ்ரீ, யஸ்வந்திகா, தர்ஷன், பவித்ரன், சஞ்சய்பாலா, ஹேமகனிஸ்கா, சப்தீஸ், தீரராகவன், மணிகண்டன், கவீஸ், அபிநயாஸ்ரீ, அஸ்வந்த், ஹர்ஷித் ஆகியோர் தனித்திறன் கட்டா, குழு கட்டா, குமிட்டே உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை கராத்தே சங்க தலைவர் முத்தையா, செயலாளர் சென்சாய், கொடைக்கானல் தனியார் நிறுவன உரிமையாளர் ரவீந்திரன் பாராட்டினர்.