ஆன்லைனில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
உயர்கல்வி குறித்த, மாணவர்களின் அனைத்து விதமான சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில், 'தினமலர்' நாளிதழ், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 'வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பளிக்கும் முக்கிய துறைகள், வீட்டில் இருந்துகொண்டே திறன்களை வளர்க்கும் விதம், வெளிநாட்டு மொழிகளை கற்பதன் முக்கியத்துவம், வரும் காலங்களில் உலகை ஆளப்போகும் முக்கிய துறைகள், படிக்கும்போதே வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள்; மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகள், அட்மிஷன் நடைமுறைகள், இன்ஜினியரிங் துறையில் புதிய வாய்ப்புகள் உட்பட மாணவர்களின் அனைத்துவித சந்தேகங்களுக்கும், பேராசிரியர்கள் மற்றும் கல்வி ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.நிகழ்ச்சியின் இரண்டு நாட்களும், காலை 10 முதல் 12 மணிவரை 'ஆன்லைன்' வாயிலாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், ஏ.ஆர்., வி.ஆர்., கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா' போன்ற பிரபலமான பிரிவுகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.கல்வியாளர்கள் ஜூலை 3ம் தேதி நிகழ்ச்சியில் உயர்கல்வி வாய்ப்புகள்’ குறித்து கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், ''இன்ஜினியரிங் துறை வாய்ப்புகள்’ மற்றும் சைபர் செக்யூரிட்டி துறையின் வாய்ப்புகள் குறித்து சென்னை அம்ரிதா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்வி நிறுவன பேராசிரியர்கள் அய்யப்பதாஸ் மற்றும் ஸ்ரீதேவி பங்கேற்கின்றனர்.ஜூலை 4ம் தேதி நிகழ்ச்சியில், ’உலகை ஆளும் துறைகள்’ குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி, ’ஐ.ஓ.டி., துறையின் எதிர்காலம்’ குறித்து அம்ரிதா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் துணை பேராசிரியர் மணிகண்டன் மற்றும் ''திறன் வளர்ப்பின் முக்கியத்துவம்’ குறித்து தொழில்நிறுவன நிபுணர் உமாசங்கர் ஆகியோர் நேரலையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகின்றனர். கேள்விகளை ஆன்லைனில் கேட்கலாம்!இந்த இலவச உயர்கல்வி ஆலோசனை நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம். www.kalvimalar.com இணையதளத்தில் மாணவர்களின் பெயர், வகுப்பு மற்றும் அலைபேசி ஆகிய தகவல்களை அளித்து பதிவு செய்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சி, தினமலர் மற்றும் கல்விமலர் இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பாகும். மேலும், மாணவர்கள் தங்களது கேள்விகளை கல்விமலர் இணையதளம் வாயிலாகவே பதிவு செய்துகொள்ளலாம். அவற்றிற்கு, நிகழ்ச்சியில் நிபுணர்கள் நேரலையில் விளக்கம் அளிப்பர்.