உள்ளூர் செய்திகள்

நல்லாசிரியர் விருது அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, வரும் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ல், நாடு முழுதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும். இதையொட்டி, மத்திய - மாநில அரசுகளின் சார்பில், ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, ஜூன் 1ல், &'ஆன்லைன்&' பதிவு துவங்கியது. இதற்கான காலக்கெடு, நேற்று முன்தினம் முடிந்த நிலையில், 10ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து, மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்