உள்ளூர் செய்திகள்

தினமலர் ஆன்லைன் வழிகாட்டி நிறைவு

சென்னை: தினமலர் மற்றும் அம்ரிதா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்&' இணைந்து முதல்கட்டமாக வழங்கிய ஆன்லைன் &'வழிகாட்டி&' நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.உயர்கல்வி குறித்த, மாணவர்களின் அனைத்து விதமான சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில், &'தினமலர்&' நாளிதழ், ஒவ்வொரு ஆண்டும் &'வழிகாட்டி&' நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஓர் ஆண்டிற்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு உயர்கல்வி தகவல்களை வழங்கி வருகிறது.ஜூலை 3 மற்றும் 4ம் தேதிகளில் நடந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.முதல் நாளில், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், இன்ஜினியரிங் துறைகளில் வழங்கப்படும் படிப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து அம்ரிதா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்வி நிறுவன பேராசிரியர் அய்யப்பதாஸ், சைபர் செக்யூரிட்டி துறையின் வாய்ப்புகள் குறித்து அம்ரிதா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்வி நிறுவன பேராசிரியர் ஸ்ரீதேவி பேசினர்.இரண்டாம் நாளில், &'உலகை ஆளும் துறைகள்&' குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, &'ஐ.ஓ.டி., துறையின் எதிர்காலம்&' குறித்து அம்ரிதா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் துணை பேராசிரியர் மணிகண்டன் மற்றும் &'திறன் வளர்ப்பின் முக்கியத்துவம்&' குறித்து தொழில் நிறுவன நிபுணர் உமாசங்கர் கந்தசாமி ஆகியோர் நேரலையில் ஆலோசனைகளை வழங்கினர்.இந்த இலவச உயர்கல்வி ஆலோசனை நிகழ்ச்சி www.kalvimalar.com இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது விபரங்களை பதிந்து கல்வியாளர்கள் வழங்கிய ஆலோசனைகளை காணலாம். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டி நிகழ்ச்சி தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்