மால்கம் ஆதிசேஷையா பெயரில் பரிசு
விழாவில், பேராசிரியர் மால்கம் ஆதிசேஷையா கல்வித் துறைக்கு ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூறப்பட்டது.இந்நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:மால்கம் ஆதிசேஷையா சிறந்த சிந்தனையாளர்; பண்பாளர். கல்வி என்பது, பாடத் திட்டம், பட்டம், செல்வாக்கு, பிழைப்பு ஆகியவற்றை கடந்து, சேவையாக கருதியவர்.அண்ணாதுரை, ஈ.வெ.ரா., போன்ற சிந் தனையாளர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அத்துடன் நின்றுவிடாமல் அவர்கள் கருத்துகளை கல்வியாளர் கள் மூலம் மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.சமுதாயத்திற்கு பயன் படும் கல்வி தற்போது வழங்கப்படுவதில்லை. எனவே, சென்னைப் பல் கலைக்கழகத்தில் மக்களுக்கு தேவையான கண்டுபிடிப்புகளை தரும் துறைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசும், சிறந்த திட்டத்தை வெளியிடும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்க முடிவு செய்துள் ளோம்.இந்த திட்டத்திற்கு, மால்கம் ஆதிசேஷையா லேண்டு டு லேண்டு திட்டம் என்று பெயர் சூட்டுகிறேன்.இவ்வாறு திருவாசகம் பேசினார்.இந்நிகழ்ச்சியில், தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மரியசலேத், சென்னை பல்கலைக் கழக பதிவாளர் துரைசாமி மற்றும் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையின் தலைவர் அரசு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.