உள்ளூர் செய்திகள்

என்.ஜி.எம்., கல்லூரி பேராசிரியருக்கு விருது

இது குறித்து என்.ஜி.எம்., கல்லூரி முதல்வர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:   மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் செம்மொழி தமிழில் சிறப்பாக பணியாற்றும் இளம் அறிஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது. 2007-08ம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுக்கு செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தால், தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில் தமிழ் துறை தலைவராக பணியாற்றிய வேல் முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இவர், இலக்கணம் மொழியியல் தொடர்பாக எழுத்திலக்கண மாற்றம், தமிழ் மரபிலக்கிணங்களில் இடைச்சொற்கள் ஆகிய இரு நூல்களும், சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல், தகவல் தொடர்பியல், கவிதையியல், வரலாற்றியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு கட்டுரை வழங்கியதற்காகவும், செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து தொல்காப்பியம் கருத்தரங்கை நடத்தியதற்காகவும் இளம் அறிஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற பேராசிரியர் வேல் முருகனுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், தற்போது மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்