உள்ளூர் செய்திகள்

பொது சட்ட நுழைவுத் தேர்வு

பல்கலைக்கழகங்களில் சட்டம் படிக்க விரும்புவோர் அதற்கான நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அடுத்த ஆண்டு நடக்கும் சி.எல்.ஏ.டி2010 ல் பின்வரும் 11 பல்கலைக் கழகங்கள் பங்கேற்கின்றன.  *நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா, பெங்களூரு (என்.எல்.எஸ்.ஐ.யூ.,)* நல்சார் யுனிவர்சிட்டி ஆப் லா,ஐதராபாத்* நேஷனல் லா இன்ஸ்டிடியூட் யுனிவர்சிட்டி, போபால் (என்.எல்.ஐ.யூ.,)* மேற்குவங்கம் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஜுரிடிகல் சயின்ஸ், கோல்கட்டா(டபிள்யூ.பி.என்.யூ.ஜே.எஸ்.,)* நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜோத்பூர் (என்.எல்.யூ., )* இதயதுல்லா நேஷனல் லாயுனிவர்சிட்டி, ராய்ப்பூர்(எச்.என்.எல்.யூ.,)* குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி, காந்திநகர் (ஜி.என்.எல்.யூ.,)* டாக்டர். ராம் மனோகர் லோகியாநேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோ (ஆர்.எம்.எல்.என்.எல்.யூ.,)* ராஜிவ்காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் லா, பஞ்சாப் (ஆர்.ஜி.என்.யூ.எல்.,)*சாணக்யா நேஷனல் லா யுனிவர்சிட்டி, பாட்னா* நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் அட்வான்ஸ்டு சட்டபடிப்புகள், கொச்சின் சி.எல்.ஏ.டி2010 சி.எல்.ஏ.டி2010 நுழைவுத் தேர்வை நேஷனல் லா யுனிவர்சிட்டி போபால் நடத்துகிறது. இந்த நுழைவுத்தேர்வின் அடிப்படையில் 11 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடக்கும். மேலும் நல்சார், என்.எல்.எஸ்.ஐ.யூ.,, என்.எல்.ஐ.யூ.,, டபிள்யூ.பி.என்.யூ.ஜே.எஸ்.,, எச்.என்.எல்.யூ.,, ஜி.என்.எல்.யூ.,, ஆர்.எம்.எல்.என்.எல்.யூ.,, மற்றும் ஆர்.ஜி.என்.யூ.எல்., ஆகிய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளுக்கும் இந்த நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும். மேலும் பாடப்பிரிவுகள், இட ஒதுக்கீடு, பயிற்சி கட்டணம் மற்றும் பிற விபரங்களை அந்தந்த பல்கலைக் கழகங்களின் இணையதளத்தில் பெறலாம். இளநிலை பட்டபடிப்பு: தகுதிகள்சி.எல்.ஏ.டி.,2010 எழுத விரும்பும் மாணவர்கள் உயர்நிலை பள்ளிக்கல்வியில்  பிளஸ் 2 வகுப்பில் 50% குறையாமல் (ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர் 45%)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்புதேர்வு எழுதுபவர்களின் வயது ஜூலை 1, 2010ஆம் ஆண்டில் 20க்கு மிகாமல் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பார்வையற்றோர்க்கு 22) இருக்க வேண்டும். தகுதிகள்முதுநிலை படிப்பில் சேர விரும்பும்மாணவர்கள் LLB / BL போன்ற இளநிலை படிப்பில் 55% க்கு குறையாமல் (ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர்க்கு 50%) தேர்ச்சி பெறிருக்க வேண்டும். தேர்வு முறை மொத்த மதிப்பெண்கள்: 200அப்ஜெக்டிவ் கேள்விகள்: தலா ஒரு மதிப்பெண் வீதம் 50 கேள்விகள்சிறு வினாக்கள்: தலா ஐந்து மதிப்பெண் வீதம் 10 கேள்விகள்பெரிய வினாக்கள்: தலா 50 மதிப்பெண் வீதம் இரண்டு கேள்விகள்பாடதிட்டம்: குற்றம் , குடும்பம், ஒப்பந்தம் அடங்கிய சட்டப்படிப்பில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.  முக்கிய தேதிகள் * ஜனவரி முதல் மற்றும் கடைசி வாரத்தில் இந்த நுழைவுத்தேர்வுக்கான விளம்பரம் அறிவிக்கப்படும்* சி.எல்.ஏ.டி.,2010 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 11, 2010 ஆம் தேதி முதல் இதை சார்ந்த அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் கிடைக்கும்.* விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 02, 2010. * தேர்வு நாள் ( இளநிலை / முதுநிலை): மே 09, 2010 ; நேரம்: காலை  10   12* முடிவு அறிவிப்பு : மே 29, 2010 . மேலும் விபரங்களுக்கு The Convenor (CLAT 2010) The National Law Institute Universit Kerwa Dam Road Bhopal 462 044 (M.P) Telephone: (0755)2696965 /70/71,FAX: (0755)2696972, Email: info@nliu.com Website: www.nliu.com www.clat.ac.in தேர்வு முறை மொத்த மதிப்பெண்கள் : 200 கேள்விகளின் எண்ணிக்கை : 200 தேர்வுக்கான பாடத்திட்டம்:ஆங்கிலம் : 40 மதிப்பெண்கள்பொது அறிவு : 50 மதிப்பெண்கள்கணிதம் : 20 மதிப்பெண்கள்ஆப்டிடியூட் : 45 மதிப்பெண்கள்ரீசனிங் : 45 மதிப்பெண்கள்முதுநிலை பட்டபடிப்பு: (LLM) சி.எல்.ஏ.டி.,2010 ஆம் ஆண்டிற்கான முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை நல்சார், என்.எல்.எஸ்.ஐ.யூ.,, என். எல்.ஐ.யூ.,, டபிள்யூ.பி.என்.யூ.ஜே.எஸ்.,, எச்.என்.எல்.யூ.,, ஜி.என்.எல்.யூ.,, ஆர்.எம்.எல்.என்.எல்.யூ.,, மற்றும் ஆர்.ஜி.என்.யூ.எல்., ஆகியவற்றில் மட்டும் நடக்கும்.  என்.எல்.யூ., யுனிவர்சிட்டியில் சேர விரும்பும் மாணவர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்