சாதி சான்று கேட்டு மறியல்
சத்தியமங்கலம்: சாதி சான்றிதழ் கேட்டு, கடம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மலையாளி இன மக்கள், கலெக்டரின் உறுதியால், மறியலை வாபஸ் பெற்றனர்.சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலை குத்தியாலத்துார் ஊராட்சியில், பவளக்குட்டை மற்றும் அத்தியூர், குரும்பூர் உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட கிராமங்களில், மலை வெள்ளாளர் என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவது போல மலையாளி இனம் என்ற பெயரில் சாதி சான்றிதழில் பெயர் மாற்றம் செய்து தரக்கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும், பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடம்பூரில் சத்தி சாலையில், ௨,௦௦௦க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் காலை, சாலையோரம் ஷாமியானா அமைத்து, போராட்டத்தை தொடங்கினர்.மதியத்துக்குப் பிறகு சாலை மறியலாக மாறியது. கோபி ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ., மற்றும் எஸ்.பி., ஆகியோர் சமாதானம் மறியலை கைவிடவில்லை. அதேசமயம் மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. அந்த நிலையிலும் மறியலை தொடர்ந்தனர். கடம்பூர்-சத்தி சாலையில் முழுமையாக போக்குவரத்து பாதித்தது. இதனால் பேச்சுவார்த்தைக்கு நள்ளிரவு, 12:30 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சென்றார். அப்போது அவரிடம் மக்கள் எங்கள் இனத்து பள்ளி மாணவர்களுக்கு, இந்து -மலையாளி என ஒரு சான்று தரவேண்டும். மேலும், மேற்படி மாணவரின் சாதிச்சான்று அரசு பரிசீலனையில் உள்ளது என சான்றளிக்க வேண்டும். மேலும், சாதி சான்று வழங்குவது அரசின் பரிசீலனையில் இருந்தால் இன்னும் எத்தனை நாளில் தீர்வு ஏற்படும் எனவும் கலெக்டரிடம் வினா எழுப்பினர். அதற்கு கலெக்டர் இந்து மலையாளி என சான்று வழங்குவதற்கு, முந்தைய கலெக்டர் மூலம், அரசுக்கு அறிக்கை போயுள்ளது. அதன் மீது மேல் நடவடிக்கைக்கு முயற்சி செய்யப்படும். தற்போது பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளுக்கு, இந்து மலையாளி என சான்றிதழில் குறிப்பிட, கல்வித்துறைக்கு தபால் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை தொடர்ந்து அதிகாலை, 2:௦௦ மணிக்கு மறியலை கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றனர்.