உள்ளூர் செய்திகள்

விளையாட்டு முறையில் கல்வி கற்பிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஆச்சாரியா பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு முறை மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது.இது தொடர்பாக ஆச்சாரியா கல்வி குழும நிறுவனர் அரவிந்தன் கூறியதாவது:குழந்தையின் ஆர்வம், தேவை மற்றும் திறன்களில் கவனம் செலுத்தப்படுகிறது. இதேபோல் செயல்வழிக் கற்றலால், குழந்தைகளின் அனுபவப்பூர்வமான கற்றலை வளர்ப்பதோடு, பொருட்களை கையாளும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சமூக தொடர்பினால் குழந்தைகளிடையே குழு விளையாட்டு, ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு ஆகியவற்றை விளையாட்டு ஊக்குவிக்கிறது. இது அவர்களின் சமூக திறன்கள் மற்றும் குழுப்பணி ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது. குழந்தைகளுக்கு படைப்பாற்றல் வெளிப்பாடு ரொம்ப முக்கியம். இது விளையாட்டு கல்வியால் மட்டுமே சாத்தியம். கலை, இசை, மற்றும் நாடகம் போன்ற பல்வேறு வகையான ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் மூலம் குழந்தைகள் தங்கள் எண்ணங்கள், சிந்தனைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுவர்.இதேபோல் சிக்கலைத் தீர்ப்பது மற்றும் விமர்சன சிந்தனை ரொம்ப முக்கியம். விளையாட்டுகள் பெரும்பாலும் சவால்கள் மற்றும் சிக்கலை தீர்க்கும் வாய்ப்புகளை ஊக்குவிக்கின்றன. விளையாடுபோது இயற்கையான உந்துதல் கிடைக்கும். விளையாட்டு குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆர்வத்தைத் துாண்டும் மற்றும் ஊக்கமளிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே ஆச்சாரியா பள்ளியில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பாடங்களை கற்று வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்