உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டியில் தொல்லியலின் சிறப்பு குறித்து மாணவர்கள் அறியும் வகையில், கிருஷ்ணகிரி மண்டல அளவிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் துரை மோகன் தொடங்கி வைத்து பேசியதாவது:தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்குமுள்ள தொல்லியல் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு சிறப்பாக கொண்டு சேர்க்கும் வண்ணம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயற்சியை தொல்லியத்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, வரும், 8 வரையில், 6 நாட்கள் நடத்துகிறது. இதில், 4 நாள் பயிற்சி மையத்திலும், 2 நாட்கள் களப்பயணமாக திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.பயிற்சியை ஹிந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு அளித்தார். தொடர்ந்து, தொல்லியல் அலுவலர் பரந்தாமன், கருத்தாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 60 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் பார்வதி, இளங்கோவன், அமுதா மற்றும் ஜானகி ஆகியோர் செயல்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்