உள்ளூர் செய்திகள்

தனியார் பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு

சென்னை: புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக, நேற்று கவர்னர் மாளிகையில், தனியார் பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு நடந்தது.சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த மாநாட்டுக்கு, கவர்னர் ரவி தலைமை வகித்தார். கூட்டத்தில், 20 தனியார் பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய கவர்னர், தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதை விரைவாக பல்கலைகளில் முழுமையாக அமல்படுத்தும்படி உத்தரவிட்டார்.மேலும், கல்வியாளர்கள், தொழில்நுட்ப பாடங்களை தமிழில் எழுதவும், மொழி பெயர்க்கவும் வலியுறுத்தினார். ஒவ்வொரு பல்கலையிலும், பல்கலை தொடர்புடைய கல்வி நிறுவனங்களிலும், தேசிய கல்விக் கொள்கை எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்ற விபரங்களை, கவர்னர் கேட்டறிந்தார். தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளதுடன், மாநிலத்துக்கு என தனி கல்விக் கொள்கை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, கவர்னர் பல்கலை துணைவேந்தர்களை அழைத்து, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும்படி வலியுறுத்தி வருவது, கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்