உள்ளூர் செய்திகள்

முதுநிலை படிப்பில் சேர அவகாசம்

திருப்பூர்: சிக்கண்ணா கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர இன்று மாலை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை: முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 14ம் தேதி(இன்று) முதல் வரும், 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இரண்டு இணையதள முகவரிகளை தவிர, போலியான பிற முகவரியில் விண்ணப்பித்து ஏமாற வேண்டாம்.எம்.ஏ., தமிழ் இலக்கியம் (18 இடங்கள்), ஆங்கில இலக்கியம் (18), பொருளியல் (19), எம்.காம்., (40), எம்.காம்., சர்வதேச வணிகம் (40), எம்.எஸ்.சி., கணினி அறிவியல் (25), இயற்பியல் (30), வேதியியல் (16), கணிதம் (50), விலங்கியல் (40) ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் (20) ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. விண்ணப்ப கட்டணம், 60 ரூபாய். இளநிலை வகுப்புகளில் கணிதம் பயின்றவர்கள், முதுநிலை கணினி அறிவியல் பட்டப் படிப்பு சேர விண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியல் வரும் 22ம் தேதி வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்