உள்ளூர் செய்திகள்

சான்றிதழ் படிப்பு: ஐ.ஐ.டி.,யில் அறிமுகம்

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிறுவன நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள், தகவல்கள் மற்றும் தரவுகள் அடிப்படையில், முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வசதியாக, சப்ளை செயின் சான்றிதழ் படிப்பு, சென்னை ஐ.ஐ.டி.,யில் துவங்கப்பட்டுள்ளது. இயக்கம் மற்றும் வினியோக சங்கிலி பகுப்பாய்வு என்ற இந்த படிப்பில் சேர, செப்., 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களை, https://code.iitm.ac.in/operations-and-supply-chain-analytics-for-strategic-decision-making என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்