நாங்குநேரி சம்பவம்: பள்ளிக்கல்வித்துறையிடம் அறிக்கை
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.