உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் போதைப்பொருட்கள் ஆசிரியர்கள் கவனம்

கோவை: மாணவர்களின் எதிர்காலம் சிறக்க, ஆசிரியர்களின் பங்களிப்பு மிக அவசியம் என மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசினார்.ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலையிலும் நேற்று நடந்தது. 145 அரசு பள்ளிகளின்தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. பள்ளி கழிவறைகள், குப்பை தொட்டிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து, போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என, ஆராய வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் சிறக்கவும், அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலம் அமையவும், ஆசிரியர்களின் பங்களிப்பு மிக அவசியம்.போதை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறந்த கவுன்சிலிங் வழங்கவும், உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கவும் தயாராக உள்ளோம். இதுகுறித்த தகவல்கள், ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்