உள்ளூர் செய்திகள்

தாட்கோ மூலம் செவிலியர் பயிற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு தாட்கோ மூலம் டி.சி.எஸ்., அயன் மற்றும் அப்போலோ மெட் ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து செவிலியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு செவிலியர் பயிற்சி அளிக்க உள்ளது.இளங்கலை, முதுகலை அறிவியல் நர்சிங் துறையில் பொதுமருத்துவம் பட்டப்படிப்பு மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டி.சி.எஸ்., அயன் மற்றும் அப்போலோ மெட் ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து இந்த பயிற்சியை வழங்குகிறது.கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் வரும் 20 முதல் 28வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இணையதளம் வழியாக நடைபெறும் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.அவர்களுக்கு முதல் 2 வாரம் இணைய வழிகற்றல், அடுத்த 4 வாரங்களுக்கு புகழ் பெற்ற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலங்களில் மாணவகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான உதவித்தொகையும் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்