உள்ளூர் செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு பெற்றோரான மாணவர்கள்

கதக்: தற்போதைய நவீன யுகத்தில், தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் இளைஞர்களே அதிகம். இவர்களுக்கு இடையே, மூத்த குடிமக்களுக்கு சேவை செய்து, வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும் இளைஞர்கள், இளம் பெண்களும் இருப்பது, ஆச்சரியமான விஷயமாகும்.பொதுவாக தாங்கள் மட்டுமே, நன்றாக வாழ்ந்தால் போதும் என, நினைப்பது சகஜம். மற்றவருக்கு சேவை செய்யும் மனப்பான்மை குறைவு. குறிப்பாக மாணவ - மாணவியரிடம் இத்தகைய குணங்கள் அபூர்வம். தங்களாலும் மனித நேயத்துடன் சேவை செய்ய முடியும் என்பதை, சில மாணவ - மாணவியர் நிரூபித்துள்ளனர். மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கின்றனர்.குழு அமைப்புகதக் மாவட்டத்தை சேர்ந்த பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு சேவை செய்கின்றனர். ஸ்னேஹ சஞ்சீவினி என்ற பெயரில், ஆதரவற்றோர் இல்லம் அமைத்து, நிர்வகித்து வருகின்றனர். ஆதரவற்றோர் பலரும் அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல், மாணவர் குழுவினர் பார்த்துக் கொள்கின்றனர்.உணவு, தங்குமிடம் கொடுத்து பராமரிக்கின்றனர். உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சை அளிக்கின்றனர். கதக் மட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் இருந்தும், ஆதரவற்றோரை அழைத்து வந்து பராமரிக்கின்றனர்.மாணவர் குழுவில் உள்ள யாருமே, பண வசதி கொண்டவர்கள் அல்ல. ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களுக்குள், சேவை மனப்பான்மை அதிகம். பிள்ளைகளால் கை விடப்பட்டு, வீதியில் ஆதரவற்று தள்ளப்படும் மூத்த குடிமக்களை கண்டு, மனம் வருந்தினர். மூத்த குடிமக்களுக்காக, ஏதாவது செய்ய வேண்டும் என, உறுதி பூண்டனர். இந்த மன உறுதியே, ஸ்னேஹ சஞ்சீவினி மையம் அமைய, காரணமாக அமைந்தது.சேவைகள்தினமும் மையத்துக்கு சென்று, முதியவர்கள், மூதாட்டிகளை அன்புடன் நலம் விசாரிக்கின்றனர். உணவு பரிமாறுவது, கை, கால்களில் நகங்கள் வெட்டுவது, கை, கால் வலிக்கு மருந்து தடவுவது, நடக்க முடியாதவர்களை, சக்கர நாற்காலிகளில் வெளியே அழைத்து செல்வது, தலை சீவுவது போன்ற சேவைகளை செய்கின்றனர். இத்தகைய நவீன காலத்தில், பல இளைஞர்கள், இளம் பெண்களின் உலகம், மொபைல் போனில் அடங்கியுள்ளது.ரீல்ஸ் செய்வது, வீடியோ எடுப்பது, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பார்ட்டி நடத்துவது, குடித்து ஆட்டம் போடுவது போன்ற, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவோரே அதிகம். இவர்களுக்கு மத்தியில் ஸ்னேஹ சஞ்சீவினி குழுவினர், முன் மாதிரியாக திகழ்கின்றனர். இவர்களை போன்றே மற்றவர்களும் சேவை மனப்பான்மையுடன் இருந்தால், ஆதரவற்றோர் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்