உள்ளூர் செய்திகள்

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

புதுச்சேரி: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்தது.தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் துரைசாமி, பிரபாவதி, சத்தியவதி, செல்வகுமார்,ராஜலட்சுமி ஆகியோர் பள்ளி மாணவர்களின் கல்விச்சூழல் குறித்து விளக்கினர்.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து பெற்றோர்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர். இந்த ஆலோசனைகளை பரிசீலித்து அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மாணவர் கோவளவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்