சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு வரவேற்பு
இது குறித்து, சென்னை வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலையின் வேந்தர் ஐசரி கணேஷ் கூறியதாவது:தற்போதைய நிலையே தொடரும்&' என, சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. நியாயத்திற்கும், நேர்மைக்கும் கிடைத்த வெற்றி. 44 நிகர்நிலைப் பல்கலைகளில் நான்கு பல்கலைகள் தவறு செய்திருந்தால், அதற்காக மற்ற நிகர்நிலைப் பல்கலைகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அநியாயம்.பல்கலைக் கழக மானியக் குழு, பத்து நபர்கள் அடங்கிய குழுவை அனுப்பி, மூன்று நாட்கள் நிகர்நிலைப் பல்கலைகளில் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தது.அந்த அறிக்கையைத் தான், மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சரிவர ஆய்வு செய்யப்படாத, டாண்டன் குழு அறிக்கையை பரிசீலனை செய்திருக்கக் கூடாது. நிகர்நிலைப் பல்கலைகள் மீது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு தவறானது.தற்போதைய நிலை தொடர, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பது, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. இந்த பிரச்னையில், நிகர்நிலைப் பல்கலைகளின் நிர்வாகத் தரப்பில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விரைவில் கூடி விவாதிப்போம். இவ்வாறு ஐசரி கணேஷ் கூறினார்.அரசு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் பழனி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய உத்தரவு, சம்பந்தப்பட்ட நிகர்நிலைப் பல்கலைகள் பிரச்னையில் இருந்து தப்பிக்கவும், கால தாமதம் செய்யவும் வழி வகுக்கும் என்றார்.