உள்ளூர் செய்திகள்

தமிழ் புத்தாக்க பயிற்சி முகாம்

மதுரை: மதுரையில் மாவட்ட தனியார் பள்ளிகள் சார்பில் சி.பி.எஸ்.இ., ஐ.சி.ஐ.சி.ஐ., கேம்பிரிட்ஜ் உட்பட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ் எவ்வாறு எளிதாக கற்றுத்தருவது என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி முகாம் நாகமலை புதுக்கோட்டை என்.எம்.எஸ்., விஜயலட்சுமி சஞ்சீவி மலையான் பள்ளியில் நடந்தது.பள்ளிக் குழும இணைச் செயலாளர் பத்மாவதி துவக்கி வைத்தார். முதல்வர் செல்வராஜ்குமார் வரவேற்றார். தனியார் பள்ளி டி.இ.ஓ., சிவானந்தன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் தாஜ்ஆயிஷா, டேவிட் கருத்தாளர்களாக பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்