முத்தமிழ் கணினி தமிழ் விருது
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், முதல்வர் கணினி தமிழ் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு, விருதுத் தொகையாக, 2 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். 2023ம் ஆண்டு விருதுக்கு, தனி நபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள், மொபைல் ஆப்ஸ்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு, டிச.,31க்குள் அனுப்ப வேண்டும்.