உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லுாரிகளுக்கு போலீசார் அட்வைஸ்

கோவை: பள்ளி மற்றும் கல்லுாரிகளின் பேருந்துகளை இயக்க அனுபவமிக்க, திறமையான ஓட்டுனர்களை பணியமர்த்த வேண்டும் என, மாநகர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.கோவையில் சமீப காலமாக பள்ளி, கல்லுாரி பேருந்துகள் விபத்து ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லுாரி பேருந்துகளால், நவ., மாதத்தில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இரு சம்பவங்களில் இருவர் பலியாகியுள்ளனர்.பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பேருந்து ஓட்டுனர்கள் வயதானவர்கள், அனுபவம் இல்லாதவர்கள், அதிவேகமாக இயக்குபவர்களாகவும் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, முறையாக பயிற்சி பெற்ற, தகுதியான அனுபவமிக்க ஓட்டுனர்கள் பள்ளி, கல்லுாரி நிர்வாகம் பணியமர்த்த வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்