உள்ளூர் செய்திகள்

துாய்மை இயக்கம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில், களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு துாய்மை இந்தியா இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உத்திரமேரூர் பேரூராட்சி, திடக்கழிவு மேலாண்மை திட்ட பூங்காவில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, துாய்மை இந்தியா இயக்க உத்திரமேரூர் பேரூராட்சி ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை வகித்தார்.மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரித்தல், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள், சுற்றுப்புறத் துாய்மை பாதுகாப்பதன் அவசியம் போன்றவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.அதை தொடர்ந்து, மூலிகை வகை செடிகள் அதன் பயன்கள், மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.மேலும், மட்காத கழிவுகளை மறுசுழற்சி செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் துாய்மை பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்