உள்ளூர் செய்திகள்

உதவித்தொகையுடன் இலவச திறன் பயிற்சி

மதுரை: மதுரையில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம், சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 1, 3 மாத கால இலவச பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. ஒரு மாத காலம் களிமண் பொம்மைகள் தயரித்தல் பயிற்சி, 3 மாத காலம் களிமண் மண்பாண்டங்கள் தயாரித்தல், சுங்குடி துணியில் மெழுகு பிரின்டிங், ஸ்கிரீன் பிரின்டிங், புடவையில் முடிச்சி கட்டுதல் பயிற்சி அளிக்கப்படும்.விருப்பமுள்ள 18 முதல் 35 வயது வரையுள்ள இருபாலரும் 8 ம்வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் உதவித்தொகையாக ரூ.12 ஆயிரத்து 500, தேநீர், மதிய உணவும் வழங்கப்படும். பயிற்சியில் கையேடு, முடித்தபின் ஆலோசனை, சான்றிதழ் வழங்கப்படும். விரும்புவோர் www.sippo.org.in என்ற இணைய முகவரியிலோ, 94430 53104ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்